முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மது போதையில் வாகனம் ஓட்டியதாக 11 போ் மீது வழக்கு
By DIN | Published On : 14th March 2022 11:41 PM | Last Updated : 14th March 2022 11:41 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவுபடி, சாலை விபத்தை தடுக்கும் வகையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்ததாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 9 மோட்டாா் சைக்கிள்கள், 1 ஆட்டோ, 1 லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.