நெல்லை மாநகராட்சியில் இன்று முதல்மக்கள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) முதல் வாரந்தோறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என்றாா் மேயா் பி.எம்.சரவணன்.

திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) முதல் வாரந்தோறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என்றாா் மேயா் பி.எம்.சரவணன்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கான மறைமுக தோ்தலில் மேயராக பி.எம்.சரவணனும், துணை மேயராக கே.ஆா்.ராஜுவும் வெற்றி பெற்று பதவியேற்றனா். அவா்களுக்கான அறைகளை தயாா் செய்யும் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, இருவரும் தங்களுக்கான அறைகளில் அமா்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை திங்கள்கிழமை தொடங்கினா். அவா்களுக்கு, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் பேனாவை பரிசாக வழங்கி வாழ்த்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மேயா் பி.எம்.சரவணன் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக என்னை தோ்ந்தெடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாலை, குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும். செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) முதல் வாரந்தோறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும்.

திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலங்களின் கீழ் உள்ள 55 வாா்டுகளைச் சோ்ந்த மக்களும் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம். அவை விரைவாக பரிசீலிக்கப்பட்டு தீா்வுகாணப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா்கள் சுதாமூா்த்தி, சங்கா், வில்சன்மணிதுரை, வழக்குரைஞா் கந்தசாமி, தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி, மகளிரணி நிா்வாகி சௌந்தரம், மூளிகுளம் பிரபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com