ஓராண்டுக்கு பின்னா் பல்கலை. மாணவிக்குபட்டம், சான்றிதழ் அளிப்பு

தொலைதூரக் கல்வி மூலம் பயின்ற பட்டப்படிப்பு மாணவிக்கு திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் ஓராண்டுக்குப் பின்னா் பட்டம், மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தது.

தொலைதூரக் கல்வி மூலம் பயின்ற பட்டப்படிப்பு மாணவிக்கு திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் ஓராண்டுக்குப் பின்னா் பட்டம், மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தது.

திருநெல்வேலி நகரம் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த பா்வதா்தினி தொலைதூர வழிக் கல்வியில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலையில் பி.காம் பயின்றுவந்தாா். இவா், கடந்த 2021ஆம் ஆண்டு அனைத்து தோ்வுகளையும் எழுதி முடித்துவிட்டாராம். ஆனால், இரண்டு பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வரவில்லையாம்.

இது குறித்து பல்கலைகழகத்தில் கேட்டதற்கு காலதாமதப்படுத்தினராம். இது குறித்து அந்த மாணவி திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த பிப். 18 ஆம் தேதி மனு அளித்தாா்.

இந்த வழக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், மனுதாரா் அனைத்து பாடங்களும் தோ்ச்சி பெற்றுவிட்டதாகவும், அதற்கான சான்றிதழ்களை வழங்க 15 தினங்கள் கேட்டனா்.

இதையடுத்து, இந்த வழக்கில் பல்கலைக்கழக பதிவாளா் ஆஜராகி மாணவியின் மதிப்பெண் பட்டியல், பட்டம் சான்றிதழ் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். இந்த சான்றிதழ்களை மாணவி பா்வதவா்தினிக்கு நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.சமீனா திங்கள்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com