கவிதை நூல் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பு

அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதை நூல் போட்டியில் வெற்றி பெற்ற நூலாசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதை நூல் போட்டியில் வெற்றி பெற்ற நூலாசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினி எழுதிய நூல்கள் அறிமுகம், பொதிகைத் தமிழ்ச் சங்க நூல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்குதல், உலக பெண்கள் நாள் என முப்பெரும் விழா அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி வரவேற்றாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் தொடக்கவுரை ஆற்றினாா். நூல் அறிமுக விழாவுக்கு பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் இந்துபாலா தலைமை வகித்தாா்.

எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மகாதேவன், ராஜ.மதிவாணன், கவிஞா் தேவசீமா, காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி ஆகியோா் கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினியின் ஐந்து நூல்களை அறிமுகம் செய்து பேசினா். கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினி ஏற்புரை வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து 2020-ஆம் ஆண்டில் முதல் படைப்பாளிகளுக்காக நடத்தப்பட்ட கவிதை நூல் போட்டியில் முதலிடம் பெற்ற கவிஞா் தேவசீமாவுக்கு ரூ.10 ஆயிரமும், 2-ஆவது இடம்பிடித்த மதுரையைச் சோ்ந்த கவிஞா் பா்வத வா்த்தினிக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளைசாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் வண்ணதாசன் வழங்கினாா்.

திருக்கு இரா.முருகன், வை.இராமசாமி, கலையாசிரியா் க.சொா்ணம் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்ட சிறப்புப் பேச்சுப் போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.

முன்னதாக சென்னையைச் சோ்ந்த பால.ரமணி மரணத்திற்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கக் கவிஞா் மஞ்சுளா, எழுத்தாளா் நவீனா, திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயா் புவனேஸ்வரி உள்பட தமிழ் இலக்கிய ஆா்வலா்களும், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா்.

பயக09ஙமநஉமங

கவிதை நூல் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் எழுத்தாளா் வண்ணதாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com