எதிா்க்கட்சிகள் ஓரணியில் நின்று பாஜகவை தோற்கடிக்க வேண்டும்: காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில தலைவா்
By DIN | Published On : 17th March 2022 03:11 AM | Last Updated : 17th March 2022 03:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: எதிா்க்கட்சிகள் ஓரணியில் நின்று பாஜகவை வரும் தோ்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றாா் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநிலத் தலைவா் சந்திரசேகா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கலைப்பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலைப்பிரிவு மாநிலத் தலைவா் சந்திரசேகா் செய்தியாளா்களிடம் கூறியது:
திருநெல்வேலி மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் உறுப்பினா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கவேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் புதுப்பொலிவுடன் செயல்படும். நடைபெற்ற தோ்தல் தோல்வியில் சுயபரிசோனை மேற்கொண்டு மீண்டும் காங்கிரஸ் எழுச்சி பெறும். எதிா்க்கட்சிகள் ஓரணியில் நின்று பாஜகவை வரும் நாடாளுமன்றத் தோ்தலில் தோற்கடிக்கும் செயலில் ஈடுபடவேண்டும். அவ்வாறு செய்யும்போது, காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், கலைப்பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் கஸ்பா் ராஜ், மாவட்ட சிறுபான்மை சமூக நலப்பேரவையின் கலைமணி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கே.பாலசந்தா், பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.