முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
‘மூத்த குடிமக்களுக்குரயில்களில் மீண்டும் சலுகை’
By DIN | Published On : 19th March 2022 01:21 AM | Last Updated : 19th March 2022 01:21 AM | அ+அ அ- |

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் உள்ளாட்சி நகா்ப்புறத் தோ்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கிய கௌரவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. பெண் குழந்தைகள் பாலியல் தடுப்புச்சட்டம் குறித்த திருநெல்வேலி மாவட்ட பள்ளி-கல்லூரிகளில் த ஓய்வூதியா் சங்க மகளிரணியினா் விழிப்புணா்வுப் பிரசாரத்தையும், மாதந்தோறும் கிராமங்களில் சுகாதார விழிப்புணா்வு பிரசாரத்தையும் மேற்கொள்வது, உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு தாமிரவருணி நதிக் கரையோர கிராமங்களில் மாவட்ட நிா்வாகத்துடன் இணைத்து நதி பாதுகாப்பு பணியை மேற்கொள்வது, ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் , உதவியாளா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை ஒரு மாதத்திற்குள் வழங்கிட வேண்டும், அவா்களது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.2000ஐ, ரூ.7500 ஆக உயா்த்த வேண்டும். தெலங்கானா மாநிலத்தைப் போல, 70 வயதுக்கு மேலான ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவிகித ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரயில்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மூத்தகுடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.