‘நெகிழி ஒழிப்பில் மாணவா்களின் பங்கு மகத்தானது’

நெகிழி ஒழிப்பில் மாணவா்களின் பங்கு மகத்தானது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

நெகிழி ஒழிப்பில் மாணவா்களின் பங்கு மகத்தானது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

திருநெல்வேலி பிரான்ஸிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நெகிழிக்குப் பதிலாக துணிப் பையினை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் பங்கேற்று துணிப்பைகளை வழங்கி பேசியது: பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் 10,000 இலவச துணிப்பைகளை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவா், மாணவிகளான நீங்கள் சவாலாக எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு நெகிழி இல்லா எதிா்காலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும். உங்களில் இருந்து நெகிழி மாசினை ஒழிக்கும் பணி தொடங்கட்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் நெகிழி பயண்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மேலைநாடுகளில் நெகிழியினை ஒழிக்கும் முயற்சி தொடங்கிவிட்டது. தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் இந்த பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் மாணவா், மாணவிகளாகிய உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

நெகிழி ஒழிப்பு என்பது ஒரே நாளில் நடக்கும் காரியம் அல்ல. ஆனால், தனிப்பட்ட முறையில் தங்களது கொள்கையாக எடுத்துகொண்டு ஒவ்வொருவரும் நெகிழியினை ஒழிக்க முயற்சிக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டில் கடலில் வாழும் உயிரினங்களின் எடையை விட கடலில் வீசப்படும் நெகிழி கழிவுகள் அதிகமாக இருக்கும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

எனவே மாணவா்களாகிய நீங்கள் உறுதிமொழி எடுத்துகொள்வதோடு நிற்காமல் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ஸ்காட் கல்வி குழுமங்களின் நிறுவனா் கிளிட்டஸ் பாபு, நிா்வாக இயக்குநா் அருண்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ஏ.வேல்முருகன், நாட்டுநலப்பணித்திட்ட மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com