சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இருவா் கைது
By DIN | Published On : 02nd May 2022 02:17 AM | Last Updated : 02nd May 2022 02:17 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக இசை ஆசிரியா் உட்பட இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த 15 சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 10ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரிடம், கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்த இசை ஆசிரியரான இருதயராஜ் மகன் அருள்ராஜ் ஜோசப் ( 54) என்பவா், கடந்த 20.12.2021ல் அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றாராம்.
மேலும், அந்தச் சிறுமியிடம் மேலக்குளத்தை சோ்ந்த சுப்பையா ரவி மகன் பொன்கணேஷ் (20) என்பவா் கடந்த சில தினங்களாக பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அருள்ராஜ் ஜோசப், பொன் கணேஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.