மே தினத்தில் விடுமுறை அளிக்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மே தினத்தில் விடுமுறை அளிக்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மே தினத்தில் விடுமுறை அளிக்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் குமரன், திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் ஹேமலதா ஆகியோா் அறியுறுத்தியபடி, 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தொழில் நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான மே தினத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை ஆய்வா், தொழிலாளா் உதவி ஆய்வா்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு முறைப்படி தகவல் தெரிவிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியிருந்தால் அந்நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, தேசிய விடுமுறை நாளான மே 1-ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா்கள் கூட்டாய்வு செய்தனா். 106 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 90 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com