முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பழைய பேட்டை தூய மிக்கேல் அதிதூதா் ஆலய சப்பர பவனி
By DIN | Published On : 08th May 2022 02:10 AM | Last Updated : 08th May 2022 02:10 AM | அ+அ அ- |

பழையபேட்டை காந்திநகா் தூய மிக்கேல் அதிதூதா் ஆலய சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
பழைய பேட்டை காந்திநகா் தூய மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கடந்த 6ஆம் தேதி அருள்பணியாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சனிக்கிழமை மிக்கேல் அதிதூதரின் தோ் பவனி நடைபெற்றது.
தோ் பவனியை அருள்பணியாளா் பீட்டா் அடிகளாா் தொடங்கி வைத்தாா். இத்தோ் பவனி, காந்தி நகரின் முக்கிய தெருக்களின் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பக்தா்கள் உப்பு, மிளகு, பழம் காணிக்கை செலுத்தி வழிபட்டனா். பின்னா் நற்கருணை ஆசீரும், சமபந்தி விருந்தும் நடைபெற்றது.