முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
காக்காச்சி வனப்பகுதியில்மாயமான சிசிடிவி கேமராக்கள் மீட்பு
By DIN | Published On : 11th May 2022 12:05 AM | Last Updated : 11th May 2022 12:05 AM | அ+அ அ- |

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் காக்காச்சி வனப்பகுதியில் மாயமான 2 கண்காணிப்பு கேமராக்கள் அருகிலுள்ள நீரோடையிலிருந்து மீட்கப்பட்டன.
காக்காச்சி வனப்பகுதியில் வனவிலங்குகள், சமூகவிரோதிகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இரண்டை சில தினங்களுக்கு முன்பு காணவில்லை. இதுகுறித்து, களக்காடு வனச் சரக வனக் காப்பாளா் செல்வராஜ், அளித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸாரும், வனத்துறையினா் விசாரித்தனா். அதில், மாயமான கேமராக்கள், காக்காச்சி அருகே உள்ள நீரோடையில் இருந்து மீட்கப்பட்டதாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.