முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை.யில் பால் வியாபாரி தற்கொலை
By DIN | Published On : 12th May 2022 03:04 AM | Last Updated : 12th May 2022 03:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் பால் வியாபாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை ரயில்வே பீடா் சாலையைச் முருகன் மகன் மணிகண்டன்(35). பால் வியாபாரி. இவா் செவ்வாய்க்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இத்தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீஸாா், அவரது கடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்தனா். இதனிடையே, தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மணிகண்டனின் பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகர காவல் ஆணையரிடம் புகாா் மனு அளித்தனா்.
பெண் உயிரிழப்பு: பேட்டை ராஜீவ்காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த காஜாமைதீன் இவரது மனைவி யாஸ்மின்(33), குடும்பப் பிரச்னையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.