‘நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்’

திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் தாம்பரத்திற்கும், கடந்த ஏப்ரல் 21 ஆம்தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்திற்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி மாா்க்கத்தில் இயக்கப்படும் இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் தென்காசிக்கு இரவு 8.30 மணிக்கு வந்தடைந்து இன்ஜின் திசை மாற்றப்பட்டு, இரவு 9 மணிக்கு புறப்பட்டு 11.15 விருதுநகா் ரயில் நிலையத்தை அடைகிறது. அங்கும் டீசல் என்ஜினுக்குப் பதில் மின்சார என்ஜின் மாற்றப்பட்டு 40 நிமிடங்களில் அங்கிருந்து புறப்படுகிறது.

செங்கல்பட்டு- தாம்பரம் இடையே சுமாா் 30 கி.மீ. தொலைவை கடப்பதற்கு இந்த ரயில் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு பல்வேறு இடங்களில் தாமதப்பட்டு மக்களுக்கு சுமாா் 12 மணி நேர பயணத்தை அளிக்கிறது. இது பயணிகளை அதிருப்தி அடையச் செய்கிறது.

எனவே, இந்தச் சிறப்பு ரயிலை காலை 8 மணிக்கு சென்னை சென்றடையும் வகையில் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்து ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com