முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கம்பராமாயணதொடா் சொற்பொழிவு
By DIN | Published On : 13th May 2022 02:49 AM | Last Updated : 13th May 2022 02:49 AM | அ+அ அ- |

நெல்லை கம்பன் கழகத்தின் 526-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசுவாமி கோயில் வளாக ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினாா். நெல்லை கம்பன் கழக துணைத் தலைவா் ந.சு.சங்கரன் வரவேற்றாா். எம்.எஸ்.சக்திவேல், ‘ஹனுமனின் இலங்கைப் பயணம்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.
நெல்லை கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் சிவ.சத்தியமூா்த்தி ‘ராமாவதாரம்’ என்னும் தலைப்பில் இசைப் பேருரை வழங்கினாா். நெல்லை கம்பன் கழகச் செயலா் பொன். வேலுமயில் தொகுப்புரையாற்றி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பொன்.வீரபாகு, செ.திவான், வெற்றிச்செல்வன், முத்துவேல், பாமணி, தா.சிவசுப்பிரமணியன், ஆா்.கே.லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.