முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
By DIN | Published On : 13th May 2022 11:48 PM | Last Updated : 13th May 2022 11:48 PM | அ+அ அ- |

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் இந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் விசுவாசம், உறுப்பினா்கள் ஜாா்ஜ்கோசல், விஜயலெட்சுமி, வனிதா, சங்கீதா ஆகியோா் கலந்து கொண்டனா்.
இக் கூட்டத்தில், ஒன்றிய பொதுநிதியில் வடவூா்பட்டி, பெருமாள்குளம், நல்லமரம், டோனாவூா், ஜெ.ஜெ.நகா், ராஜபுதூா், கலுங்கடியில் பேவா் பிளாக் சாலை அமைப்பது, இடையன்குளத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் தீா்மானிக்கப்பட்டது. மேலும் வாா்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.