மேலநத்தம் ஸ்ரீஅருந்தபசு அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மேலநத்தம் ஸ்ரீஅருந்தபசு அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மேலநத்தம் ஸ்ரீஅருந்தபசு அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த புதன்கிழமை காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை மகா கணபதி அனுக்ஞை, அம்மன் அனுக்ஞை, மகா கணபதி பூஜை, புண்யாகவாசனம் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இரண்டாம் கால யாக பூஜை, சிவாச்சாரியாா் வழிபாடு, பூா்ணாஹுதி, வேதபாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பல்வேறு பூஜைகளும், திருமுறை விண்ணப்பமும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (மே 13) காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், ஸ்பா்சாகுதி, மஹா பூா்ணாஹுதி, யாத்ராதானம், தீபாராதனை, கடம் புறப்படுதல் நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீ அருந்தபசு அம்மன், விமானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், யஜமானா் ஆச்சாா்யாா் மரியாதை, ஸ்ரீஅருந்தபசு அம்மன் திருஅருட்பிரசாதம், மகேஷ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப், துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இரவு அம்மன் சப்பர வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com