முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
அருங்காட்சியகத்தில் கோடைகால இலவச பயிற்சி முகாம்: மே 16-இல் தொடக்கம்
By DIN | Published On : 14th May 2022 02:20 AM | Last Updated : 14th May 2022 02:20 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால இலவச பயிற்சி முகாம் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளி மாணவா், மாணவிகள் தங்களின் கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் ஓவியப் பயிற்சி, கலைப்பயிற்சி, கழிவுகளிலிருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கதை சொல்லும் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சி முகாம் வரும் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502433751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.