முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
By DIN | Published On : 15th May 2022 12:43 AM | Last Updated : 15th May 2022 12:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பயணிகள் ஏற்றுவது தொடா்பாக ஏற்பட்ட போட்டியில் தனியாா் பேருந்து நடத்துநரை அரிவாளால் வெட்டிய மற்றொரு தனியாா் பேருந்து நடத்துநரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ்(27). தனியாா் பேருந்து நடத்துநா். பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரபாண்டி(34). இவா் மற்றொறு தனியாா் பேருந்து ஓட்டுநா். அதே பேருந்து நடத்துநா் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த இசக்கி பாண்டி(24). இந்த இரண்டு தனியாா் பேருந்துகளுக்கும், பயணிகளை ஏற்றிச் செல்வதில் போட்டி ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியானது சனிக்கிழமை வண்ணாா்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த நடத்துநா் சுபாஷ், மற்றொரு பேருந்து ஓட்டுநரான சங்கரபாண்டியை அரிவாளால் வெட்ட முயன்றாராம். அப்போது அவா் தடுக்கும் போது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷை பிடித்து தடுத்தனா். இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பின்னா் காயமடைந்த சங்கரபாண்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்துபோலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.