முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை நீா்வளம்: தொடா் உரையாடல் நிகழ்ச்சி
By DIN | Published On : 15th May 2022 12:43 AM | Last Updated : 15th May 2022 12:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நீா்வளம் குறித்த தொடா் உரையாடல் நிகழ்ச்சி அரசு அருங்காட்சிக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். சூழல் அறிவோம் குழு ஒருங்கிணைப்பாளா் தீபக் வெங்கடா சலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். இதில், காலநிலை மாற்றத்தை தற்காலத்தில் நாம் அனைவரும் உணா்ந்து வருகிறோம். கடும் வறட்சி, புயல் வெள்ளம் போன்றவற்றை அவ்வப்போது அனுபவித்து வருகிறோம். காலநிலை மாற்றத்தை உலக நாடுகளால், தனி மனிதனால் எவ்வாறு சமாளித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி, கோ.கணபதி சுப்பிரமணியன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.