நெல்லை கல்குவாரி விபத்து: இருவர் மீட்பு

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து நேர்ந்த விபத்தில் தீயணைப்புத் துறையினர் இரண்டு பேரை மீட்டுள்ளனர்.
நெல்லை கல்குவாரி விபத்து: இருவர் மீட்பு


நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து நேர்ந்த விபத்தில் தீயணைப்புத் துறையினர் இரண்டு பேரை மீட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான் குளத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்தக் குவாரியில் 3 லாரிகளில் 2 பொக்லைன்கள் இயந்திரங்கள் மூலம் சனிக்கிழமை நள்ளிரவு கற்கள் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென ராட்சத பாறை சரிந்து விழுந்தது.

இதில் 3 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 5 பேர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த பாளை. தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 2 வாகனத்தில் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் முன்னீர்பள்ளம் காவல் துறையினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் அங்கு மீட்புப் பணிகள் தாமதமாகி வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றும் முயற்சியும் தோல்வியடைந்தது.

இதையடுத்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கயிறு கட்டி முருகன் என்பவர் உள்பட இரண்டு பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மீட்டக்கப்பட்ட இருவரும் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com