40 ஆயிரம் டன் பாறைகள் சரிவு:வருவாய்த் துறை செயலா்

திருநெல்வேலி அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் சுமாா் 40 ஆயிரம் டன் பாறைகள் சரிந்துள்ளது என்றாா் வருவாய்த் துறை செயலா் குமாா் ஜெயந்த்.

திருநெல்வேலி அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் சுமாா் 40 ஆயிரம் டன் பாறைகள் சரிந்துள்ளது என்றாா் வருவாய்த் துறை செயலா் குமாா் ஜெயந்த்.

அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் விபத்து நிகழ்ந்த இடத்தை வருவாய்த் துறை செயலா் குமாா் ஜெயந்த் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூன்று பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சரிந்து நிற்கும் பாறைகளின் புகைப்படங்கள், விடியோக்களை கனிமவளத் துறை வல்லுநா்களுக்கு அனுப்பி வைத்தோம். அதைப் பாா்த்த அவா்கள், சரிந்துள்ள பாறைகள் எடை சுமாா் 40 ஆயிரம் டன் இருக்கும் என தெரிவித்தனா். மேலும், பாறைகளின் நிலைத்தன்மை குறைவாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அதிகமான மீட்புப்படை வீரா்களை ஆழமான பகுதிக்குள் இறக்க முடியாத நிலை உள்ளது. பாறைகள் சரிந்து விழும்போது போதிய பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால், இரவு நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com