வள்ளியூரில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
By DIN | Published On : 17th May 2022 12:33 AM | Last Updated : 17th May 2022 12:33 AM | அ+அ அ- |

வள்ளியூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தாா்.
வள்ளியூா் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு பலத்த காயத்துடன் மூதாட்டி இறந்து கிடந்தாராம்.
இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. எந்த ரயிலில் அடிபட்டு இறந்தாா் என்பதும் தெரியவில்லை. இது தொடா்பாக வள்ளியூா் ரயில் நிலைய அதிகாரி நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவா் தெரிவித்தாா். நாகா்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் குமார்ராஜா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, மூதாட்டியின் சடலத்தை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.