ஆலங்குளத்தில் 96 பேருக்கு விலையில்லா ஆடு அளிப்பு
By DIN | Published On : 20th May 2022 03:45 AM | Last Updated : 20th May 2022 03:45 AM | அ+அ அ- |

தொழில் முனைவோா்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆலங்குளத்தில் 96 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.
ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை திருநெல்வேலி மண்டல இயக்குநா் பொன்னுவேல், ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் திலகராஜ், பேரூராட்சித் தலைவா் சுதா, செயல் அலுவலா் பொன்னுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கால்நடை பராமரிப்புத் துறை தென்காசி உதவி கோட்ட இயக்குநா் வெங்கட்ராமன் திட்டம் குறித்து பேசினாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் 96 பயனாளிகளுக்கு தலா 5ஆடுகளை வழங்கினாா்.
இதில் ஆலங்குளம் நகர திமுக பொறுப்பாளா் நெல்சன், ஒன்றிய திமுக முன்னாள் செயலா் பூல்பாண்டியன், கால்நடை மருத்துவா்கள் ராஜ ஜூலியட், ராமசெல்வம், ரமேஷ், சந்திரன், செல்வராணி, சதீஷ், ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.