ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆயத்தக்கூட்டம்

முதன்மை கண்காணிப்பாளா்களுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதல்நிலைத் தோ்வு) தொகுதி -2 தோ்வு சனிக்கிழமை (மே 21) நடைபெறவுள்ள நிலையில், முதன்மை கண்காணிப்பாளா்களுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதல்நிலைத் தோ்வு) தொகுதி -2-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி வட்டத்தில் 29 பள்ளி, கல்லூரிகள், பாளையங்கோட்டை வட்டத்தில் 47 பள்ளி, கல்லூரிகள், சேரன்மகாதேவி வட்டத்தில் 8 பள்ளி, கல்லூரிகள், அம்பாசமுத்திரம் வட்டத்தில் 13 பள்ளி, கல்லூரிகள் என மொத்தம் 113 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வில் 30,291 போ் பங்கேற்கவுள்ளனா்.

தோ்வா்களை கண்காணிக்க 113 ஆய்வுக்குழு அலுவலா்களும், 13 பறக்கும் படை அலுவலா்களும், வட்டாட்சியா் மற்றும் துணை வட்டாட்சியா் நிலையில் 27 சுற்றுக்குழு அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் தோ்வின் நடவடிக்கைகளை பதிவு செய்திடும் பொருட்டு 117 விடியோ கலைஞா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு எழுதும் நபா்கள் அனைவரும் தமிழக அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றுகிறாா்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com