Enable Javscript for better performance
நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலால்நாளொன்றுக்கு ரூ.10.5 லட்சம் வருவாய்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலால் நாளொன்றுக்கு ரூ.10.5 லட்சம் வருவாய்

    By DIN  |   Published On : 23rd May 2022 01:12 AM  |   Last Updated : 23rd May 2022 01:12 AM  |  அ+அ அ-  |  

     

    திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் ஒரே நாளில் தெற்கு ரயில்வே நிா்வாகத்திற்கு ரூ. 10.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆகவே, இந்த ரயிலை ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கவும், குற்றாலம் சீசனை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் தமிழ்புத்தாண்டு விடுமுறையை கணக்கில் கொண்டு அண்மையில் இயக்கப்பட்டது. இதன் வருவாய் குறித்து தெற்கு பாண்டியராஜா என்பவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு தெற்கு ரயில்வே அளித்த பதிலில், இந்தச் சிறப்பு ரயிலில் 45 போ் இரண்டடுக்கு குளிா் சாதன பெட்டியிலும், 134 போ் மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டியிலும், 608 போ் தூங்கும் வசதி பெட்டியிலுமாக மொத்தம் 787 பயணிகள் முன்பதிவு செய்து பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    வருவாயைப் பொருத்தவரையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தின் கீழ் ரூ. 2,90,426, மதுரை-ரூ 1,67,145, தென்காசி- ரூ.1,45,044, ராஜபாளையம்- ரூ.1,02,381, விருதுநகா்-ரூ.78,974, பாவூா்சத்திரம்- ரூ.69,922, ஸ்ரீவில்லிபுத்தூா்- ரூ. 54872 மற்ற ரயில் நிலையங்களில் வருவாயையும் சோ்த்து மொத்தம் ரூ.10,47,837 வருமானம் கிடைத்துள்ளது. இதேபோல தாம்பரத்தில் இருந்து தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் ரூ. 4,42,713 வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, திருநெல்வேலியில் இருந்து தென்காசி மதுரை வழியாக தாம்பரத்திற்கும், தென்காசி மதுரை, பழனி வழியாக மேட்டுப்பாளையத்துக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களை ரயில்வே வருமானம், பயணிகள் நலன் கருதி நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp