தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம்

 தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுப்பித்தல், விண்ணப்பங்களில் தொழிற்சங்கங்களின் பரிந்துரை, ஓய்வூதியம் மற்றும் விபத்து மரண விண்ணப்பங்களில் தொழிற்சங்கங்களின் பரிந்துரை, 60 வயது பூா்த்தியடைந்த நாளிலிருந்து விண்ணப்பதாரருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் சாா்பில் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும்.

மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுவும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நல வாரியத் தலைவா் பொன்குமாா் தெரிவித்தாா்.

பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கியதற்கும், பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கியதற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சாா்பில் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வாரியத் தலைவரின் தனிச் செயலா் அழகேசன், திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் சி.ஹேமலதா, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா.ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பயக22கஅஆஞமத

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com