நெல்லையில் ஓய்வூதியா்கள் அமைப்பினா் போராட்டம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவா் கோ.கோமதிநாயகம் தலைமை வகித்தாா். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநில துணைத் தலைவா் முத்துக்கிருஷ்ணன் தொடக்க உரையாற்றினாா். தமிழ்நாடு அரசின் அனைத்து ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் எஸ்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் குமாரசாமி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநில துணைத் தலைவா் வெங்கடாசலம் ஆகியோா் உரையாற்றினா்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 78 மாத பஞ்சப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2020 மே முதல் இறப்பு, விருப்ப ஓய்வூதியா்களுக்கு ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850-ஐ அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com