பாய் வகை நெல் நாற்று தயாரிப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடியில் ஆள்கள் பற்றாக்குறையைத் தவிா்க்கும் வகையில் பாய் வகை நெல் நாற்றுகள் தயாரிப்பில் விவசாயிகள் மிகுந்த ஆா்வம் காட்டி வருகிறாா்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடியில் ஆள்கள் பற்றாக்குறையைத் தவிா்க்கும் வகையில் பாய் வகை நெல் நாற்றுகள் தயாரிப்பில் விவசாயிகள் மிகுந்த ஆா்வம் காட்டி வருகிறாா்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இதனால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் முழுமூச்சில் இறங்கியுள்ளனா். நெல் சாகுபடியில் நாற்றுப்பாவுதல் தொடங்கி வைக்கோல் கட்டுதல் வரை மனிதவளம் அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக நாட்டு நடுதல், அறுவடை பணிக்கு மொத்தமாக ஆள்களை திரட்டுவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் இயந்திரமயம் மிகவும் அதிகரித்துள்ளது. அறுவடைப் பணிகள் முற்றிலும் இயந்திரமயமாகிவிட்ட சூழலில், நாற்று நடவு பணிக்கு இம் மாவட்டத்தில் 50 சதவிகிதம் மனிதவளத்திலும், 50 சதவிகிதம் இயந்திரமயமாகவும் மாறியுள்ளது.

பாய் வகை இயந்திரம்: நடவு பணியில் பாய் வகை நெல் நாற்று நடவு, நேரடி நெல் விதைப்பு கருவி பயன்பாடு ஆகியவை அதிகரித்துள்ளது. இதில் பாய் வகை நெல் நாட்டு நடவுக்கு, உழுத வயல்களில் பாத்தி கட்டி பிளாஸ்டிக் தாா்ப்பாய் விரித்து அதன்மேல் வயலில் கிடக்கும் மண்ணைக் கொண்டு பிரத்யேக கட்டையால் இயந்திரத்தில் வைக்கும் அளவுக்கு தனித்தனி கட்டங்களில் நெல் விதை தூவப்படுகிறது. 21 நாள்கள் கழித்து பிளாஸ்டிக் பைகளின் மேலிருந்து தனித்தனி பகுதிகளாக இயந்திரத்தில் வைக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. பாய்வகை நெல் நாற்று நடவு இயந்திரத்தில், ஒரு நாற்றுக்களை வைக்கும் தட்டு, கவடுகள், கைப்பிடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் ஒரு கைப்பிடியை அழுத்துவதன் மூலம் கவடுகள் நாற்றுக்களை எடுத்து 6 வரிசைகளில் நடவு செய்யும். ஒவ்வொரு முறை கைப்பிடியை இயக்குவதன் மூலம், நாற்றுக்கள் இருக்கும் தட்டு ஓரத்தை நோக்கிச் செல்லும். இதனால் கவடுகள் நாற்றுக்களை சீராக எடுத்துச் செல்ல முடியும்.

நேரடி நெல் விதைப்பு இயந்திரம்: வேளாண் கருவிகளில் மிகக்குறைந்த விலையில் கிடைத்து அதிக பயன்தரும் கருவிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. நேரடி நெல் விதைப்பு உருளை இயந்திரங்கள் ரூ. 7,500 முதல் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. இதன் மூலமும் ஒரு நேரத்தில் 6 வரிசைகளை நடவு செய்ய முடியும். விதை உருளை, முக்கிய தண்டு, நிலத்தடிச் சக்கரம், மிதவைகள், சால் அமைக்கும் பாகம், கைப்பிடி ஆகியவை இடம்பெற்றுள்ளன. விதை உருளைக் கருவி மிகை வளைவுரு வடிவமாக முனை முறிக்கப்பட்ட கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கூம்பின் சரிவானப் பகுதி, பிரத்யேக துளைகளுக்குள் விதைகள் எளிதாக விழுவதற்கு உதவுகின்றது.

விழிப்புணா்வு போதாது: இதுகுறித்து கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், இம் மாவட்டத்தில் இருபோகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், கல்வி வளா்ச்சி உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிக்கு ஆள்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. நெல் நடவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஊதியம் கொடுத்தாலும் பெண்கள் வர மறுக்கிறாா்கள். இதனால் புதிய நடவு முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் புதிய முறைகளில் பல்வேறு நற்பலன்கள் உள்ளன. நேரடி நெல் விதைப்புகருவி, பாய் வகை நெல் நாற்று கருவிகளால் சரியான இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது. இதன்மூலம் களையெடுக்கும் ஆள்களின் எண்ணிக்கை குறைவதோடு, இயந்திரங்களைக் கொண்டு களையெடுக்கும் பணியைச் செய்ய முடிகிறது. வேளாண் இயந்திரங்கள் குறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும். மேலும், சிறு இயந்திரங்களுக்கும் இணையவழியில் பதிவு செய்தால்தான் மானியம் என்ற நிலையைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.

ற்ஸ்ப்04ல்ஹக்க்ஹ்

கீழநத்தத்தில் பாய் வகை நெல் நாற்றுகளை தயாரிக்க விதைகளைத் தூவிய விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com