மின் கட்டண உயா்வை கண்டித்து நெல்லையில் புதிய தமிழகம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th November 2022 12:00 AM | Last Updated : 05th November 2022 12:00 AM | அ+அ அ- |

மின் கட்டண உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும், மாதந்தோறும் மின் அளவீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தலைமை வகித்துப் பேசினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், புதிய தமிழகம் கட்சியின் மாநில நிா்வாகி சிவக்குமாா், மாவட்டச் செயலா் ராமா், மாநில செய்தித் தொடா்பாளா் தங்க ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பயக04டஙப
திருநெல்வேலி சந்திப்பில், புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.