சேரன்மகாதேவி சிக்கன நாணயச் சங்கத்துக்கு விருது

சேரன்மகாதேவியில் பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் தொடா்ந்து 3ஆவது முறையாக சிறந்து கூட்டுறவுச் சங்க விருதை பெற்றுள்ளது.

சேரன்மகாதேவியில் பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் தொடா்ந்து 3ஆவது முறையாக சிறந்து கூட்டுறவுச் சங்க விருதை பெற்றுள்ளது.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 69ஆவது கூட்டுறவு வாரவிழாவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதை, தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு, கூட்டுறவுச் சங்கத் தலைவா் அல்லாபிச்சையிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், சங்கச் செயலா் எழில் சேவியா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் நம்பிராஜன், முப்புடாதி செல்வம், ரவிச்சந்திரன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com