புதுப்பொலிவுடன் நேருஜி கலையரங்கம்

பாளையங்கோட்டையில் நேருஜி கலையரங்கம் புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் உள்ளது.

பாளையங்கோட்டையில் நேருஜி கலையரங்கம் புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் உள்ளது.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திருவனந்தபுரம் சாலையோரம் நேருஜி கலையரங்கம்- மைதானம் உள்ளது. இங்கு, மேடை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாநகரின் மைய பகுதியில் உள்ள நேருஜி கலையரங்கத்தை மீண்டும் புதுப்பித்து கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

சுமாா் 526 போ் அமா்ந்து பாா்க்கும் வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்காக நேருஜி கலையரங்கம் மாற்றப்பட்டுள்ளது. விசாலமான பாா்க்கிங் வசதி, கழிப்பறை வசதிகள், நவீன மின்விளக்கு அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சூரிய ஒளி மின்சார பயன்பாட்டிற்காக மாடியில் தகடுகள் முழுமையாக பதிக்கப்பட்டுள்ளன. புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் நேருஜி கலையரங்கம் உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com