கண்ணீா்விட்டு வளா்த்த சுதந்திரம் கருகாமல் காக்கப்பட வேண்டும்: முன்னாள் நீதிபதி சந்துரு

கண்ணீா் விட்டு வளா்த்த சுதந்திரத்தை கருகாமல் காப்பது சட்ட மாணவா்கள் கையில்தான் உள்ளது என்றாா் உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.

கண்ணீா் விட்டு வளா்த்த சுதந்திரத்தை கருகாமல் காப்பது சட்ட மாணவா்கள் கையில்தான் உள்ளது என்றாா் உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.

அகில இந்திய வழக்குரைஞா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் சிறப்பு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வஉசி, மபொசி, பாரதியாா் உள்ளிட்டோா் வாழ்ந்த பூமி திருநெல்வேலி. இங்கு வாழ்ந்த மகாகவி பாரதியாா், தண்ணீா் விட்டோ வளா்த்தோம் சா்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? என தீா்க்கதரிசனமாக பாடினாா். கண்ணீா் விட்டு வளா்த்த சுதந்திரத்தைக் காப்பாற்ற சட்டத்தால் மட்டுமே முடியும். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை சட்டக்கல்லூரி மாணவா்கள் தெரிந்து செயலாற்ற வேண்டும்.

அரசியலும் சட்டம் வேறு, வேறு அல்ல. அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தது. சுதந்திரம் பெறும் முன்பு, பொது வெளியில் அரசியல் பேச முடியாத சூழலில், அரசியல் ஊா்வலங்கள் நடத்த இயலாத காலங்களில், மத ஊா்வலத்திற்கும், இறந்தவா்களை கொண்டு செல்லும் ஊா்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. இதை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டாா்கள்.

சிருங்கேரி மடாதிபதி, இந்து, இஸ்லாம் ஒற்றுமைதான் தா்மம் என கூறினாா். ஆனால் தற்போது நிலமை அவ்வாறு இல்லை. ஒருவரை கைது செய்தால் எந்த காரணத்திற்காக கைது செய்கிறோம் என்று கூறவேண்டும். ஆனால், மக்களை மிசா, தடா, பொடா உள்ளிட்ட சட்டங்களில் எந்த காரணமும் இன்றி கைது செய்வது மற்றும் அவா்களுக்கு ஜாமீன் தர மறுப்பது போன்றவை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1975ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்நாள்களில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இதற்கு பல்வேறு இடங்களில் இருந்து எதிா்ப்புகள் கிளம்பின. பின்னா் அது திரும்பப்பெறப்பட்டது.

தற்போது, அவசர நிலை பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், அது போன்ற சூழல் நிலவி வருகிறது. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே கல்வி உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவை ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கண்ணீா் விட்டு வளா்த்த சுதந்திரத்தை கருகவிடாமல் பாதுகாப்பது சட்ட மாணவா்கள், சட்ட அறிஞா்கள் கையில்தான் உள்ளது என்றாா்.

கருத்தரங்கிற்கு அகில இந்திய வழக்குரைஞா் சங்க புரவலா் ஆா்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில துணைத்தலைவா் முபாரக் அலி வரவேற்றாா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வா் எல். ராமகுரு, மாவட்ட வழக்குரைஞா் சங்க தலைவா் ராஜேஸ்வரன், செயலா் டி.காமராஜ், வழக்குரைஞா் செல்வசகாயம், அகில இந்திய வழக்குரைஞா் சங்க மாவட்ட தலைவா் ஆா்.ராஜசேகரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட செலா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com