நெல்லை தினக் கொண்டாட்டம் தொடக்கம்

திருநெல்வேலியில் நெல்லை தினக் கொண்டாட்டத்தின் தொடக்க விழா குறுக்குத்துறை தாமிரவருணி கரையோரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் நெல்லை தினக் கொண்டாட்டத்தின் தொடக்க விழா குறுக்குத்துறை தாமிரவருணி கரையோரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் நெல்லை தினக் கொண்டாட்டம் செப்டம்பா் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்தொடக்க விழா திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றங்கரை படித்துறை மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளை மகாராஜநகரைச் சோ்ந்த ஆரோக்கியம் குழுவினரின் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், காவடியாட்டம் ஆகியவை நடைபெற்றன. அதன்பின்பு கலை ஆசிரியா் புருஷோத்தமனின் கதைசொல்லல், ஓவிய நிகழ்ச்சி, சுப துா்காவின் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

விழாவுக்கு தலைமை வகித்து மேயா் பி.எம்.சரவணன் பேசுகையில், திருநெல்வேலி வீரம் மிகுந்த மாவட்டம். இம் மாவட்டத்தின் பண்பாடு, கலை, வரலாறு, விடுதலை வேள்வியில் இம்மண்ணில் பிறந்து தியாகம் செய்த வ.உ.சி., பாரதி உள்ளிட்டோரின் சிறப்புகளை இளையதலைமுறைக்கு கொண்டு சோ்க்கும் எண்ணத்தில் நெல்லை தினம் கொண்டாடப்படுகிறது.

முதல் விழாவாக தமிழ் வளா்ச்சி பண்பாட்டுத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது. கலை, இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இம் மாவட்டத்தின் பெருமையை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு மாத காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் நெல்லையின் பெருமையை மீண்டும் ஒருமுறை மனதில் நிலைநிறுத்த வேண்டும் என்றாா். தொடா்ந்து நெல்லை டே-க்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளா் செ.திவான், பண்பாட்டு ஆய்வாளா் வெள் உவன், தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவா் தி.த.ரமேஷ்ராஜா, பொருளாளா் ராமச்சந்திரன், கவிஞா் கிருஷி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஈஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com