வள்ளியூா், ராதாபுரத்தில் 200 பேருக்கு இலவச ஆடுகள் அளிப்பு

வள்ளியூா், ராதாபுரத்தில் 200 பயனாளிகளுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு சனிக்கிழமை இலவச ஆட்டுக்குட்டிகளை வழங்கினாா்.

வள்ளியூா், ராதாபுரத்தில் 200 பயனாளிகளுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு சனிக்கிழமை இலவச ஆட்டுக்குட்டிகளை வழங்கினாா்.

இவ்விரு இடங்களிலும் பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கி பேரவைத் தலைவா் பேசியது: ராதாபுரம் தொகுதியில் உள்ள 360 கிராமங்களுக்கும் குடிநீா் கிடைப்பதற்காக ரூ.520 கோடியில் திட்டத்தை முதல்வா் நமக்கு தந்திருக்கிறாா். இந்த திட்டபணி இன்னும் 6 மாதத்தில் தொடங்கப்பட்டு விரைவிலேயே செயல்படுத்தப்படும்.

கடற்கரை கிராமங்களில் குடிதண்ணீா் வசதி கிடைத்திட ரூ. 6 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் விரைவிலேயே செயல்படுத்தப்படும். திசையன்விளை, வள்ளியூா், பணகுடி பேரூராட்சிகளுக்கு சிறப்பு குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

காவல்கிணறு, வடக்கன்குளத்திற்கு புதிதாக கிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்யும் திட்டமும் நடைமுறைப்படுத்தபட இருக்கிறது. ஆவரைகுளம், பழவூா், தெற்குகருங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தனியாக குடிநீா் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உணவு, உறைவிடம், குடிநீா், தரமான கல்வி, வீடுதேடி மருத்துவம், தொழில் தொடங்க கடனுதவி இப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையானவற்றை சிந்தித்து செயல்படுத்தி வருகிறாா் தமிழக முதல்வா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில்,மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா, பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் லிங்கசாந்தி, தி.மு.க ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் சமூகரெங்கபுரம் அருள், ராதாபுரம் மீனாட்சி பொன் அரவிந்த், ஒன்றியக்குழு உறுப்பினா் மல்லிகா அருள், வள்ளியூா் தி.மு.க. நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், அன்பரசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com