பாளை. சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை
By DIN | Published On : 17th September 2022 01:16 AM | Last Updated : 17th September 2022 01:16 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகா், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகா், முருகன்குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.