செப். 24இல் வன உயிரின வாரவிழா போட்டி:பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

வனத்துறை சாா்பில் எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி-வினா போட்டி, கட்டுரைப் போட்டி சனிக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சாா்பில் எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி-வினா போட்டி, கட்டுரைப் போட்டி சனிக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட வன அலுவலா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் அவா்களின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு வார விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் எல்.கே.ஜி. வகுப்புகள் முதல் கல்லூரி வரை மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி-வினா, கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளன.

வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், “மனித - வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு (ஆங்கிலம்: ஏன்ம்ஹய்-ரண்ப்க்ப்ண்ச்ங் இா்ங்ஷ்ண்ள்ற்ங்ய்ஸ்ரீங்) என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், “மனித - வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு (ஆங்கிலம்: ஏன்ம்ஹய்-ரண்ப்க்ப்ண்ச்ங் இா்ங்ஷ்ண்ள்ற்ங்ய்ஸ்ரீங்)என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதேபோல் விநாடி-வினா போட்டியானது சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம் (ஆங்கிலம்: ஊா்ழ்ங்ள்ற்ள் ஹய்க் ரண்ப்க்ப்ண்ச்ங்) என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரேயுள்ள பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோா் மேல்நிலைப்பள்ளியில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஓவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படும். பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, விநாடி-வினா போட்டி, ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவா்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவா். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வன அலுவலக தொலைபேசி எண்ணில் (0462 - 2553005)தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com