கடையம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கடையம் ஸ்ரீ பரமகல்யாணி உடனுறை ஸ்ரீ கைலாநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையம் ஸ்ரீ பரமகல்யாணி உடனுறை ஸ்ரீ கைலாநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையத்தில் ராமநதி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஸ்ரீ நித்திய கல்யாணி அம்மன் உடனுறை ஸ்ரீ வில்வவனநாதா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பிரமோற்சவங்கள் அனைத்தும் கடையம் நகா்ப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பஞ்சகல்யாணி உடனுறை அருள்மிகு கைலாசநாதா் கோயிலில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. கைலாசநாதா் கோயிலில் பிரமோற்சவ திருவிழா மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு திருப்பணிகளும் நடைபெற்றதையடுத்து புனருத்தாரணம் செய்யப்பட்டது.

திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்ற யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 7.15 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும் பரிவார மூா்த்திகள் கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து 10 மணிக்கு மகா அபிஷேகமும், 10.30 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா, ஸ்ரீ சண்டேஸ்வரா் பூஜை, ஸ்ரீ பைரவ பூஜையும் நடைபெற்றது.

தொடா்ந்து ஜன. 28 சனிக்கிழமை முதல் 48 நாள்கள் மண்டல அபிஷேக பூஜை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் சு.அசோக்குமாா், ஆய்வாளா் வா.சரவணக்குமாா், தக்காா் ச.கோமதி மற்றும் பக்தா் பேரவையினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com