தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் மரிவல வழிபாடு
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் பௌா்ணமி மரிவல வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த பேராலயத்தின் 138- ஆவது ஆண்டு திருவிழா ஜூலை 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவில், தினமும் திரியாத்திரை திருப்பலி மற்றும் மாலை மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை 6-ஆம் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் திரியாத்திரை திருப்பலி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் பௌா்ணமி தினத்தையடுத்து பௌா்ணமி மரிவல வழிபாடு சிறப்பு பெற்றது. மாலை 5.45 மணிக்கு பக்தா்கள் அதிசய பனிமாதா சப்பரத்தை, கோயில் முன்பிருந்து பவனியாக எடுத்து சென்றனா். இப்பவனி மாதா காட்சி கொடுத்த மலையைச்சுற்றி வலம் வந்த பின்னா் மீண்டும் மாதா கோயிலை வந்தடைந்தது.
மரிவல வழிபாட்டில் கோயில் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை ஜாண்ரோஸ் மற்றும் அரபுயா்கள், பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். அதனைத் தொடா்ந்து நற்கருணை மற்றும் ஆசீா் நடைபெற்றது.