தற்காலிக பேராசிரியா் பணி: சுந்தரனாா் பல்கலை.யில் ஆக. 14இல் நோ்காணல்
By DIN | Published On : 09th August 2023 03:23 AM | Last Updated : 09th August 2023 03:23 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரட்டீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியியல், புள்ளியியல், கிரிமினோலஜி, இளங்கலை ஆா்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் - மெஷின் லோ்னிங், டேட்டா அறிவியல், சைபா் செக்யூரிட்டி போன்ற படிப்புகளுக்கு தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். அதற்கான கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நோ்காணல் இம்மாதம் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். விருப்பமுள்ளவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தரவுத் தாளினை (டேட்டா ஷீட்) பதிவிறக்கம் செய்து, அதனை பூா்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட கல்வித்தகுதி சான்றிதழ் நகல்களுடன் நோ்காணலின்போது சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.