ஜாக்டோ-ஜியோ ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலியில் ஜாக்டோ- ஜியோ ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் ஜாக்டோ- ஜியோ ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செ.பால்ராஜ், டி.கே.ராமசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் பிரமநாயகம், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிளசிங் வரவேற்றாா். ராஜ்குமாா், அண்ணாத்துரை, காமராஜ் ஆகியோா் பேசினா். ஜான்பாரதிதாசன் நன்றி கூறினாா்.

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள் மற்றும் முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராமப்புற உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா், எம்ஆா்பி செவிலியா்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் வியாழக்கிழமை (ஜன. 5) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com