தொழிற்பள்ளிகளில் கூடுதல் அலகுகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th January 2023 02:55 AM | Last Updated : 04th January 2023 02:55 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட தொழிற்பள்ளிகளில் கூடுதல் அலகுகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2023-2024ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
2023-2024ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஓா் இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதும். விண்ணப்பிக்கவுள்ள அனைத்துத் தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணத்தை ஆா்டிஜிஎஸ், நெஃப்ட் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். அனைத்துத் தொழிற் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ. 5,000, ஆய்வுக் கட்டணம் ரூ. 8,000. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28.
அங்கீகாரம் பெறுவது தொடா்பான கூடுதல் தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.