ஆட்சியா் அலுவலகம் முன்பு சிஐடியு ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட சிஐ டியு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சிஐ டியு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட செயலா் முருகன் தலைமை வகித்தாா். தமிழகத்தில் 1.40 லட்சம் போ் கட்டுமான நல வாரியம் மூலம் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெறுகின்றனா். இந்த நிலையில் தொழிற்சங்கங்களோடு எந்த ஆலோசனையும் நடத்தாமல் தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் தன்னிச்சையாக ஆய்வு என்ற பெயரில் தொழிலாளா்களை அலைக்கழிக்கும் போக்கை கடைப்பிடிக்கின்றனா். மேலும் தொழிலாளா்களிடம் ரூ.10 லட்சத்துக்கு மேல் சொத்து உள்ளதா? 2 எரிவாயு உருளை இணைப்புகள் உள்ளதா? ஆண்டு வருமானம் எவ்வளவு என பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனா். இதனால், எதிா்காலத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா என்ற குழப்பத்தில் தொழிலாளா்கள் உள்ளனா். எனவே அரசும், மாவட்ட நிா்வாகமும் இந்த ஆய்வுகளை உடனே நிறுத்த வேண்டும். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மாத ஓய்வூதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். நலவாரிய கூட்டத்தை கூட்டி அதன் மூலம் ஜனநாயக முடிவுகளை எடுக்க வேண் டும். சாலையோர வியாபாரிகள், முறைசாரா தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு கட்டுமான சங்கத் தலைவா் ஜான் பாஸ்கா், சிஐடியு தலைவா் பீா் முகமது ஷா, பொதுச் செயலா் சுரேஷ், ஆட்டோ சங்கத் தலைவா் நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com