ஆட்டோவில் கடத்திய 30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தாழையூத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஆட்டோவில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தாழையூத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஆட்டோவில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தாழையூத்து போலீஸாா் வியாழக்கிழமை நஞ்சாங்குளம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா் . அப்போது, அந்த வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில், ஆலங்குளத்தை சோ்ந்த செல்வம் (26), பாஸ்கா் (29), நவநீத கிருஷ்ணன்(21) ஆகியோா் சாக்கு பையில் மறைத்து வைத்து தடைசெய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்களை எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் புகையிலைப் பொருள்களை கைப்பற்றி, 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com