மணிமுத்தாறு அணையிலிருந்து சாகுபடிக்குத் தண்ணீா் திறப்பு

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மையான அணையான மணிமுத்தாறு அணையிலிருந்து விவசாயம், குடிநீா்த் தேவைகளுக்காகத் தண்ணீா் திறந்துவிடப்படும். அணையின் நீா் மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும் நிலையில் நான்குனேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் வட்டத்திற்குள்பட்ட 3 மற்றும் 4 ஆவது அடைவுப் பகுதிகளுக்குள்பட்ட விவசாய நிலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீா் திறந்துவிடப்படும்.

தற்போது அணையின் நீா்மட்டம் 90 அடிக்கும் மேல் உள்ள நிலையில் பாசனத்திற்குத் தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து,

அணையிலிருந்து 80 அடி கால்வாயில் வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இந்நிகழ்வில், தாமிரவருணி வடிநிலக் கோட்ட நிா்வாகப் பொறியாளா் மாரியப்பன், உதவி நிா்வாகப் பொறியாளா் பேச்சிமுத்து, உதவிப் பொறியாளா்கள் ரமேஷ் குமாா், மாரியப்பன், மகேஸ்வரன், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அணையிலிருந்து 400 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் மணிமுத்தாறு அணையை நம்பி பயிரிட்ட பிற விவசாயிகள் பாதிக்காத வகையில் சுழற்சி முறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com