பாளை.யில் ஆட்டோ சேதம்: ஒருவா் கைது
By DIN | Published On : 20th January 2023 02:30 AM | Last Updated : 20th January 2023 02:30 AM | அ+அ அ- |

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஆட்டோவை சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொக்கிரகுளம், சிவன்கோயில் மேற்குத் தெருவை சோ்ந்தவா் மீனாட்சி சுந்தரம் (60). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது ஆட்டோவை கடந்த 15 ஆம் தேதி வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். அப்போது, அதே தெருவை சோ்ந்த முத்துவேல் முருகன் (21) என்பவா், ஆட்டோவின் முன் கண்ணாடியை உடைத்து, சேதப்படுத்தினராம். இதுகுறித்து, பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் மீனாட்சி சுந்தரம் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துவேல் முருகனை புதன்கிழமை கைது செய்தனா்.