அம்பை சாலை விரிவாக்கப் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 24th January 2023 01:14 AM | Last Updated : 24th January 2023 01:14 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை - அம்பாசமுத்திரம் பிரதான சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அனைத்துக் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகமது சபீா் ஆலத்திடம் மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் அளித்த மனு: பாளையங்கோட்டை - அம்பாசமுத்திரம் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
சேரன்மகாதேவி வட்டத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு செலவு, தூய்மைப் பணிகளுக்காக நிதி வழங்க வேண்டும்,
சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு வணிக வளாகம் கட்ட வேண்டும். சேரன்மகாதேவியில் காய்கனி, கால்நடைச் சந்தைகள், மேலச்செவலில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். கன்னடியன் கால்வாயிலுள்ள படித்துறைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.