நேதாஜி பிறந்த தினத்தில் அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை
By DIN | Published On : 24th January 2023 03:52 AM | Last Updated : 24th January 2023 03:52 AM | அ+அ அ- |

விடுதலைப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அரசு விடுமுறை அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த தின விழா மகாராஜநகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. அவரது உருவப் படத்திற்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்குரைஞா் அன்பு அங்கப்பன், புல்லட்ராஜா, முத்துப்பாண்டி, முத்துவளவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
நேதாஜி பிறந்த தினத்தை அரசு விடுமுறையாக மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். தமிழக அரசின் சாா்பில் வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.