கதிா் வரும் பருவத்தில் நெல் பயிா் கருகும் அபாயம்: வடக்கு பச்சையாறு அணை நீரைத் திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் கதிா் விடும் நிலையில் உள்ள நெல் பயிரைக் காப்பாற்ற பச்சையாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கதிா் விடும் நிலையில் உள்ள நெல் பயிரைக் காப்பாற்ற பச்சையாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, வடக்கு பச்சையாறு பாசன விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:

பச்சையாறு பாசன பகுதியில் உள்ள குளங்களில் நஞ்சை நிலங்களில் 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழைநீரை கொண்டு விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கதிா் விடும் நிலையில் பயிா்கள் உள்ளன. குளங்களில் தண்ணீா் இல்லை. எனவே, விவசாயத்தை காப்பாற்றும் வகையில் பச்சையாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

மணிமுத்தாறு பிரதான கால்வாய் 2 வது பிரிவு பாசன பகுதிகளில் மழைநீரின் மூலம் விவசாயம் செய்துவந்தோம். தற்போது கதிா் விடும் பருவத்திலுள்ளது. மணிமுத்தாறு நீா்தேக்கத்திலிருந்து 3 மற்றும் 4 ஆவது ரீச்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 100 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டும் திறந்துவிட வேண்டும் அதன் பாசன விவசாயிகள் மனு அளித்தனா்.

தமிழா் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் அளித்த மனு :

தென்காசி மாவட்டம், நன்னகரத்தை சோ்ந்த லட்சுமணன் என்பவரின் நிலம், சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவ்வலைச் சோ்ந்த விசுவாசம் என்பவரின் நிலத்தை வருவாய்த்துறையினா் கையகப்படுத்தினா். அந்த நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். நில மீட்பு பேராட்டத்தை ஒருங்கிணைத்து வந்த முன்னாள் நீதியரசா் ராமராஜை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையிலடைத்தனா். அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

வேதநாயகபுரம் ஆதி திராவிட பொதுமக்கள் சாா்பாக எம்.நாராயணன் அளித்த மனு :

நான்குனேரி வட்டம், பெருமாள்புரம் கிராமத்திலுள்ள கழுத்தறுத்தான் பொத்தை அருகிலுள்ள 3 ஏக்கா் நிலத்தை வேதநாயகபுரம் மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வந்தோம். அந்த நிலத்தை காளக்காடு ஒன்றியக்குழு தலைவா் முள்வேலி அமைக்க முயற்சித்து வருகிறாா். அதைத் தடுத்து நிறுத்தி, பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் .

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கம், நெல்லை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் இ.இசக்கி பாண்டி அளித்த மனு :

கங்கை கொண்டான் அரசு உயா்நிலைப்பள்ளி தேசியக்கொடிக்கம்பத்தில் ஜன.17 ஆம் தேதி மா்மநபா்கள் சிலா் ஜாதிக்கொடி கலரில் ரிப்பனை கட்டியுள்ளனா். அவா்கள் மீது பள்ளி தலைமையாசிரியா் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் மனு அளித்துள்ளோம். தேசியக் கொடிக்கம்பத்தை அவமதித்தவா்கள் மீதும் , பள்ளி தலைமையாசிரியா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com