வள்ளியூரில் ரூ. 95 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

வள்ளியூா் பேரூராட்சியில் ரூ. 95 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

வள்ளியூா் பேரூராட்சியில் ரூ. 95 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

திருநெல்வேலி எம்.பி. சா. ஞானதிரவியம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.95 லட்சம் மதிப்பில் இந்த வளா்ச்சிப்பணிகளை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தாா். அதில், ரூ.75 லட்சத்தில்3 லட்சம் லிட்டா் கொள்ளளவு திறன் கொண்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டி, சேனையா்தெரு, யாதவா் தெருக்களில் தலா ரூ.6.50 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டடம், ராமகிருஷ்ணாபுரத்தில் ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஆகியவை கட்டப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சிகளில் பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், மீனவரணி மாநில துணை அமைப்பாளா் எரிக் ஜூடு, தி.மு.க. மாவட்ட துணைச் செயலா் நம்பி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ஜாவித், தி.மு.க. நகரச் செயலாளா் சேதுராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மல்லிகா அருள், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஜான்சி ராஜம், வி.இ.சசி, ஜோஸ்பின் ராஜேஸ்வரி, மாணிக்கம், காா்த்திக் சுபாஷ், வள்ளியூா் ஒன்றியக்குழு உறுப்பினா் பிலிப்ஸ் பொன்குமாா், வி.கே.ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com