களக்காட்டில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 25th January 2023 01:50 AM | Last Updated : 25th January 2023 01:50 AM | அ+அ அ- |

களக்காட்டில் நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.27) நடைபெறுகிறது.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நாய் வளா்ப்பவா்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களது நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிசெலுத்தி பயன்பெறலாம்.